புத்தளத்தில் தனது காதலியை கத்தியால் தாக்கி கொலை செய்த 21 வயது இளைஞன் பொலிசாரிடம் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை வைக்கல் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் கூறினர்.
இறந்தவர் வைக்கல் பகுதியில் உள்ள வீட்டில் வசிக்கும் 19 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுமி 21 வயது இளைஞனுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக காதல் உறவில் இருந்ததாக பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இருவருக்கும் இடையே காதல் விவகாரம் தொடர்பில், ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்தமையால், குறித்த நபர் சிறுமியை கத்தியால் .தாக்கியதாக பொலிசார் கூறினர்.
Link : https://namathulk.com
