முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றம் நேற்று பொலிசாருக்கு உத்தரவிட்டது.
சில மாதங்களுக்கு முன்பு வெலிகந்த பொலிசார் 20 பசுக்களுடன் இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன்படி, பசுக்களை அரசாங்க பண்ணையில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்ட போதிலும், அவை இரண்டு கடத்தல்காரர்களிடம் மீண்டும் விற்கப்பட்டன.
அதற்கமைவாக, சம்பந்தப்பட்ட, அதிகாரி வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கடந்த 18 ஆம் தேதி பொலிசாரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மேலும் பிரதான சந்தேக நபரான முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமறைவாக உள்ளதாக, வடமத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, பொலிஸ் நிலை பொறுப்பதிகாரிக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com