இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் தேவி குஸ்டினா டோபிங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமனறத்தில் சந்தித்தார்
இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துறையாடப்பட்டது.
அத்துடன், இரு தரப்பினரும் பரஸ்பர நன்மைக்காக இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வளர்ப்பதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
இலங்கையின் விவசாயத் துறையை ஆதரித்தல், குறிப்பாக பனை எண்ணெய் இறக்குமதி மற்றும் கரிம திரவ உரங்களை அறிமுகப்படுத்துதல் ஆகிய வர்த்தக வாய்ப்புக்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது.
இலங்கையின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் மின்சார வாகனங்களை ஒருங்கிணைப்பது குறித்த கலந்துரையாடப்பட்டது.
அத்துடன், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்பு கூட்டாண்மைக்கான மற்றொரு நம்பிக்கைக்குரிய பகுதியாக முன்னிலைப்படுத்தப்பட்டது.
Link : https://namathulk.com