இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒப்பந்தத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் வதந்திகளை இந்தியாவின் அதானி குழுமம் முற்றாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
நிறுவனம் ஒரு கிலோவாட் மணிக்கு 7 காசுகள் வரை விலையை மாற்றியமைக்க ஒப்புக்கொண்டதாகக் கூறுவது முற்றிலும் தவறானது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நிறுவப்பட்ட ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முழுமையாக உறுதிபூண்டுள்ளதாகவும், அதானி கிரீன் எனர்ஜி எஸ்எல் லிமிடெட்டின் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் திட்ட அளவுருக்கள் மாறவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Link : https://namathulk.com