இலங்கை விமானப்படையின் K8 ரக பயிற்சி விமானம் ஒன்று வாரியபொல பகுதியில் இன்று விபத்துக்குள்ளானது.
விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறி பாராசூட்களைப் பயன்படுத்தி தரையிறங்கியதாக விமானப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும், விபத்தினால் பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்தது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Link : https://namathulk.com