அவுஸ்திரெலிய, நாட்டவரின் நிறுவனம் தொடர்பான நிதி மோசடி : உதய கம்மன்பில உள்ளிட்ட இருவரை விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு.

Rajan
By
1 Min Read
நிதி மோசடி

அவுஸ்திரெலியா நாட்டவரின் நிறுவனம் தொடர்பான நிதி மோசடி வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் மற்றொரு சந்தேக நபரை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது.

மோசடியான பங்கு பரிவர்த்தனை தொடர்பாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் 09 ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு அவுஸ்திரெலிய பிரஜை ஒருவரின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி தனது நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதற்கான சட்டப்பூர்வ ஆவணத்தைத் தயாரித்ததாக உதய கம்மன்பில மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, செப்டம்பர் 26, 1996 முதல் செப்டம்பர் 21, 1997 வரை கம்மன்பில 21 மில்லியன் ரூபா வரை நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

Link : https://namathulk.com

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *