பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமானார்.
தனக்கு இரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சென்னையில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அண்மையில் ஹுசைனி தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ஹுசைனி இன்று (25) அதிகாலை உயிரிழந்தார்.
புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், ஹுசைனி உயிரிழந்தமை இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக தான் உயிரிழந்த 3 நாட்களுக்கு பிறகு, தனது உடலை ஸ்ரீ ராசந்திரா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புவதாக ஹுசைனி வீடியோ வெளியிட்டு தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Link : https://namathulk.com