கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கனடா விசாக்களுடன் ஒன்பது இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை, விமான நிலையத்தில் போலி விசா ஆவணங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட மிகப்பெரிய குழுவாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள், பயணி ஒருவரின் ஆவணங்கள் குறித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்த பின்னர் மேற்படி 9பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில்இ,30 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள், போலி கனடா விசாவைப் பெறுவதற்கு தலா 4.5 மில்லியன் ரூபா செலவிட்டதாக தெரியவந்தது.
அத்துடன், இந்த குற்றச்செயலின் பிரதான சூத்திரதாரி, கனடாவில் நிரந்தரமாக வசிப்பவர் எனவும், அவர் உள்ளூர் முகவர் மூலம் செயல்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Link : https://namathulk.com