குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 20 இலங்கை கைதிகள் இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைதிகள் இன்றைய தினம் காலை 11.45 மணியளவில் குவைத்திலிருந்து சீ – 17 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
குவைத் மற்றும் இலங்கைக்கு இடையில் 2007ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம், குவைத் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கைதிகளில் 34 பேர் கடந்த 2024 ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எஞ்சியிருந்த இலங்கை கைதிகளில் மேலும் 20 பேர் இன்று நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இவ்வாறு நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட 20 கைதிகளையும் அழைத்துச் செல்வதற்கு சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்திருந்தனர்.
Link : https://namathulk.com