இலங்கையின் முன்னாள் ஆயுதப்படைத் தளபதிகளுக்கு எதிராக பிரித்தானியா விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள் போது பரவலான மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக பிரித்தானிய அரசாங்கம் கூறும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைகளும் விடுதலை புலிகள் அமைப்பிற்கெதிரானதே தவிர தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது அல்ல எனவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
மேலும், இலங்கையின் தேசிய பாதுகாப்பை பாதுகாப்தற்கான கடமைகளை செய்த முன்னாள் இராணுவ வீரர்களை வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புக்கள் துன்புறுத்துவதாக முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
அத்துடன், முன்னாள் இராணுவ வீரர்களை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளுமென நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Link : https://namathulk.com