உள்நாட்டுப் போரின் போது ஏற்பட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்கள் எனக் கூறப்படும் நால்வர் மீது பிரித்தானியா விதித்துள்ள தடையானது பிரித்தானிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்ச நடவடிக்கையாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிநாட்லுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அவர்களிடம் இன்று கூறினார்.
இதன்போது, இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீதான சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடை ஆகியவை அடங்கும் என்பதையும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இத்தகைய ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய நல்லிணக்க செயல்முறைக்கு உதவாது எனவும் அமைச்சு கூறியுள்ளது.
Link : https://namathulk.com