கிண்ணியா தள வைத்தியசாலையில் உளநல சிகிச்சைக்காக ‘ரம்மிய இல்லம்’ என்ற பெயரில் பிரிவு ஒன்று இன்று புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தப் பிரிவு, வைத்தியசாலையின் வைத்திய அத்தியேட்சகர் னு. ர். நயன சந்திரதாசவினால் திறந்து வைக்கப்பட்டது.
இவ்வாறு உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் 20 தொடக்கம் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், அவர்கள் இன்றைய நவீன சூழலால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வைத்திய அத்தியேட்சகர் தெரிவித்தார்.
போதை பொருள் பாவனை, இளம் வயது திருமணத்தில் பின்னர் ஏற்படுகின்ற பிரச்சினைகள், சமூக ஊடகங்களின் தாக்கங்கள் இவர்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிருப்பதையும் அவதானிக்க கூடியதாக உள்ளதாகலும் வைத்திய அத்தியேட்சகர் கூறினார்.
மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெறுவதற்காகவே குறித்த பிரிவை தற்போது நாங்கள் ரம்மிய இல்லமென மாற்றியிருப்பதாக வைத்திய அத்தியேட்சகர் குறிப்பிட்டார்.
Link : https://namathulk.com