தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளின் பல இடங்களில் பரவிவரும் காட்டுத்தீயினால் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை தென் கொரியாவின் தென்கிழக்கு பகுதிகளில் பயங்கர காட்டுத் தீ பரவியது.
இதன் காரணமாக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதோடு, நூற்றுக்கணக்கான கைதிகள் சிறைச்சாலைகளிலிருந்து இடம் மாற்றப்பட்டடுள்ளனர்.
இந்நிலையில் தற்போது வரை காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதியில் வரட்சியான வானிலை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com