ஹமாஸ் அமைப்பு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என வலியுறுத்தி பாலஸ்தீனத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காசா மக்களைப் பாதுகாக்க ஹமாஸ் விரும்பினால், அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தியுள்ளனர்.
‘போரை நிறுத்து’, ‘போரை முடிவுக்குக் கொண்டு வா’, நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை’, “எங்கள் குழந்தைகளின் இரத்தம் மலிவானது அல்ல’ போன்ற கோசங்களை போராட்டக்காரர்கள் எழுப்பியதுடன் பதாகைகளையும் ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
Link: https://namathulk.com/