அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமெரிக்கத் தூதுவருடன், தமது நீண்டகால தொடர்புகள் மற்றும் நிலைபேறான தன்மை குறித்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாகவும், குறிப்பாக புனித ரமழான் மாதத்தில், காசா மக்கள் எதிர் கொண்டுள்ள பெரும் துயரங்கள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பிலும் தமது ஆழ்ந்த கவலையை தூதுவரிடம் வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com