காசா மீது இஸ்ரேலிய படையினர் இன்று நடத்திய தாக்குதலில் ஹமாஸின் பேச்சாளர் ஒருவர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் காசா முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலில் கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் ஒரு இலட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காசாவிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே இஸ்ரேல் தொடர்ந்தும் சிரியா மீது தாக்குதல் நடத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, துறைமுக நகரமான லடாகியாவை அண்டிய பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதாகத் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Link: https://namathulk.com