இலங்கை மற்றும் தாய்லாந்திற்கிடையேயான 6வது சுற்று இருதரப்பு அரசியல் பேச்சுவார்த்தைகள், நேற்றுமுன்தினம் (25) பாங்காக்கில் உள்ள தாய்லாந்தின், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜா மற்றும் தாய்லாந்தின் வெளியுறவுக்கான நிரந்தரச் செயலாளர் திருமதி எக்சிரி பின்தருச்சி ஆகியோர் இவ்வாலோசனைகளுக்கு இணை தலைமை தாங்கினர்.
இவ்வாண்டு, இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகியவை தமக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், நடைபெற்ற இருதரப்பு ஆலோசனைகளில் அரசியல் ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மீன்வளம் மற்றும் விவசாயத் துறை ஒத்துழைப்பு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.






Link: https://namathulk.com