நெதர்லாந்தின் மத்திய ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ஸ்கொயர் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 5ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த பகுதியில் மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதலை நடத்தியுள்ளார்.
இந்த தாக்குதலில் 5ற்கும் மேற்பட்டடோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலீசார் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link : https://namathulk.com