அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த முக்கிய சந்தேகநபரை பாதிக்கப்பட்ட பெண் அடையாளம் கண்டுள்ளார்.
அநுராதபுரம் தலைமை நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய முன்னிலையில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது பாதிக்கப்பட்ட வைத்தியர், சந்தேகநபரை அடையாளம் கண்டுள்ளார்.
அநுராதபுரம் தலைமை நீதவான் அலுவலகத்தில் இன்று அடையாள அணிவகுப்பு நடைபெற்றது.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியரின் அறைக்குள் வைத்து மார்ச் 10 ஆம் திகதி அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து, வைத்தியரின் கையடக்க தொலைபேசியுடன் சந்தேகநபர் தப்பிச்சென்றார்.
கல்னேவ பகுதியில் அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
Link : https://namathulk.com