முட்டை விற்பனையாளர்கள் பெற்றுக்கொள்ளும் வருமானத்திற்கான வரி செலுத்தப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய முட்டை விற்பனைக்கு 18 வீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
வரி விதிக்கப்பட்டுள்ள போதிலும் முட்டை விலை அதிகரிக்கப்படாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
எனினும் முட்டைக்கான வரி விதிக்கப்பட்டமை அநீதியான செயற்பாடு எனவும், இதனால் தமது தொழிற்துறை பாதிப்படையும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது சந்தையில் முட்டை ஒன்றின் விலை முப்பது (30) ரூபாவாக காணப்படுகிறது
Link: https://namathulk.com