உள்ளூர் பால் உற்பத்தியாளரான மில்கோ பிரைவேட் லிமிடெட், இன்று முதல் அமுலாகும் வகையில் அதன் பல தயாரிப்புகளின் விலையைக் குறைப்பதாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஹைலேண்ட் யோகட்டின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 70 ரூபாவாகும்.
பல புதிய பால் பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக விலைக் குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மில்கோ பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com