மட்டக்களப்பு வவுனதீவு மகிழவெட்டுவான் கிராமத்தில் உள்ள பாலம் முற்றாக உடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த பாலமானது மகிழவெட்டுவான், கரவெட்டி மற்றும் பல கிராமங்களை உள்ளடக்கிய முக்கிய மார்க்ங்களை இணைப்பதாக காணப்படுகின்றது.
தற்போது வரை இப்பாலத்தினூடாக பொதுமக்கள் கனரக வாகனங்களில் பிரயாணம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
இதனால் கிராம மக்கள் மாற்று வழி ஊடாகவே பல மைல்கள் சுற்றி பயணிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
பாலம் இதுவரை புணரமைக்காமல் இருப்பதனால் உரிய அதிகாரிகள், இதனை கவனத்திலற் கொண்டு புதிய பாலம் ஒன்றை அமைத்து தருமாறு மகிழவெட்டுவான் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com