இலங்கை மீது அமெரிக்க அரசாங்கம் சமீபத்தில் விதித்த வரிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை வெளியிட்டுள்ளார்.
44% அமெரிக்க வரி என்பது வெறும் வர்த்தகப் பிரச்சினை மட்டுமல்ல, ஒரு விழிப்புணர்வு அழைப்பு என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தனது உத்தியோகப்பூர்வ X தளத்திலேயே அவர் இதனை கூறினார்.
குறித்த பதிவில், இலங்கைக்கு ஒரு மூலோபாய மறுசீரமைப்பு தேவை என கூறிய எதிர்க்கட்சி தலைவர் பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்தார்.
மனக்குழப்பங்களுக்கு அப்பால் கூட்டாண்மையை ஏற்படுத்தல்.
சில உள்ளூர் கூட்டமைப்பைத் திருப்திப்படுத்துவதற்காக வெறுப்பைப் பரப்புவதை நிறுத்தல்.
இந்தியா மற்றும் பங்களாதேஷுடன் ஆசியாவை மையமாகக் கொண்ட வர்த்தக உத்தியை உருவாக்கல்.
வரிகளிலிருந்து உற்பத்தி சார்ந்த, முதலீட்டாளர் நட்பு வளர்ச்சிக்கு மாறல்.
Link: https://namathulk.com