அமெரிக்க அரசாங்கத்தால் விதிக்கப்படும் பரஸ்பர வரிகளால் இலங்கை எதிர்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு நடத்தி பரிந்துரைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஒரு குழுவை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் அறிக்கையின்படி, இந்தக் குழுவில் ஆடைகள் உட்பட இலங்கையின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளனர்.
நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர், இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகார பிரிவின் இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக நியமிக்கப்பட்ட குழுவில் மூத்த ஜனாதிபதி ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவா, இலங்கை வர்த்தக சபையின் தலைமை பொருளாதாரக் கொள்கை ஆலோசகர் ஷிரான் பெர்னாண்டோ மற்றும் இலங்கையின் உயர்மட்ட தொழிலதிபர்கள் அஷ்ரஃப் ஓமர், ஷரத் அமலியன் மற்றும் சைஃப் ஜாஃபர்ஜி ஆகியோரும் அடங்குவர்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் திருத்தப்பட்ட வர்த்தகக் கொள்கையின் கீழ் அமெரிக்கா இலங்கைப் பொருட்களுக்கு 44மூ வரி விதித்ததைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்தப் புதிய குழுவை நியமித்துள்ளார்.
Link: https://namathulk.com