‘கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் மற்றும் கச்சத்தீவு பிரச்சினை என்பன தொடர்பில் யாழில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அமைச்ர் இதனை கூறினார்.
இதன்போது, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதை சர்வதேசம் கூட அங்கீகரித்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.
எனவே, தமிழகத்தில் தேர்தலுக்கு வேண்டுமானாலும் கச்சத்தீவு பிரச்சினையை வைத்து விளையாடலாம் எனலும், அது இலங்கைக்குரியது என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் அமைசர் கூறினார்.
அதேவேளைஇ தமிழக மீனவர்களிடமிருந்து பெறப்பட்டு அரசுடமையாக்கப்பட்டுள்ள கப்பல்களை ஆழ்கடலில் மூழ்கடிப்பது தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அத்துடன்இ பாரத பிரதமர் மோடியின் வருகை என்பது மீனவர்களுக்கான வருகை அல்ல எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
Link: https://namathulk.com