எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக இலங்கை பொலிசாருக்கு ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏப்ரல் 02 முதல் 05 வரை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்படி, பேலியகொட பகுதியிலிருந்து அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துதல் மற்றும், ராகம பகுதியில் தேர்தல் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பான முறைப்பாடுகள் ஏப்ரல் 2ஆம் திகதி பதிவாகியுள்ளது.
ஏப்ரல் 04 ஆம் திகதி களனியில் தேர்தல் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டது தொடர்பாகவும் முறைப்பாடு பெறப்பட்டது.
ஏப்ரல் 05 ஆம் திகதி களனி சுகாதார முகாம் நடத்துவது தொடர்பாக மூன்று முறைப்பாடுகளும், மொனராகலையிலிருந்து இரண்டு முறைப்பாடுகளும் பெறப்பட்டன.
Link: https://namathulk.com