உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை தவறாக வழிநடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018 நவம்பரில் மட்டக்களப்பு, வவுனத்தீவு பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குறித்த கான்ஸ்டபிள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இன்று கரடியனாறு பகுதியில் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
Link: https://namathulk.com/